Driving Licence: ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்கக் காலக்கெடு நீட்டிப்பு!

Advertisements

2024 ஜனவரி 31ஆம் தேதி முதல் 24 பிப்ரவரி 15ஆம் தேதிவரை காலாவதியான, கற்றல் உரிமம், ஓட்டுனர் உரிமம் மற்றும் நடத்துனர் உரிமம் வரும் பிப்ரவரி மாதம் 29ஆம் தேதிவரை செல்லுபடி ஆகும் என்றும், மேலும் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதற்கான அபராத கட்டணம் ஏதும் விதிக்கப்படாது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாகனங்கள் வைத்திருக்கும் அனைவருக்குமே, ஓட்டுனர் உரிமம் என்னும் டிரைவிங் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஒரு ஆவணம். ஓட்டுநர் உரிமத்தை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துப் பெரும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2024 ஜனவரி 31 முதல் 2024 பிப்ரவரி 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் காலாவதியான லேர்னஸ் லைசன்ஸ் என்னும் கற்றல் உரிமம், டிரைவிங் லைசன்ஸ் என்னும் ஓட்டுநர் உரிமம், கண்டக்டர் லைசென்ஸ் என்னும் நடத்துனர் உரிமம், போன்றவை செல்லுபடி ஆகும் காலத்தை பிப்ரவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து, சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் சாரதி  போர்டலில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, காலாவதியான உரிமங்களை புதுப்பிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் சாரதி போர்டலில், 2024 ஜனவரி 31ஆம் தேதி முதல், 2024 பிப்ரவரி 12ஆம் தேதிவரை, சிக்கல்கள் காணப்பட்டன. இதனால் ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க விண்ணப்பிக்க முயன்றவர்கள், உரிமம் தொடர்பான சேவைகளை பெறுவதில், பெருத்த இடையூறுகளை எதிர்கொண்டனர்.

விண்ணப்பதாரர்கள் எதிர்கொண்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு, 2024 ஜனவரி 31ஆம் தேதி முதல் 24 பிப்ரவரி 15ஆம் தேதி வரை காலாவதியான, கற்றல் உரிமம், ஓட்டுனர் உரிமம் மற்றும் நடத்துனர் உரிமம் வரும் பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி வரை செல்லுபடி ஆகும் என்றும், மேலும் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதற்கான அபராத கட்டணம் ஏதும் விதிக்கப்படாது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் ஓட்டுநர் உரிமத்திற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க வசதிகள் இருப்பதோடு, ஓட்டுனர் உரிமத்தை ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்து கொள்ளவும், தொலைந்து போன ஓட்டுநர் உரிமத்தின், நகலை எடுத்துக் கொள்ளவும் முடியும். ஆஃப்லைனில் விண்ணப்பிக்க, அருகில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று, அடையாளச் சான்றுகள், வசிப்பிடச் சான்றுகள், குடியுரிமைச் சான்றுகள் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *