
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருமண நிகழ்ச்சிக்காக, அமைச்சர்களை வரவேற்க வைக்கப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து, விவசாயி ஒருவரின் பற்களை பதம் பார்த்துள்ளது.
அருப்புக்கோட்டை அருகே அகரத்துப்பட்டியில் திமுக நிர்வாகியின் இல்லத் திருமணம் நடந்தது. இதற்காக அந்த பகுதியில் அமைச்சர்களை வரவேற்று திருச்சுழி சாலையில் ஏராளமான திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டு, பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அந்த வழியாக செவல்பட்டி கார்த்திகேயன் நகரைச் சேர்ந்த சண்முகவேல் என்ற விவசாயி அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் நடப்பட்டிருந்த திமுக கொடி கம்பம் சாய்ந்து விழுந்தது. சாய்ந்து விழுந்த கொடி கம்பம் சரியாக இரு சக்கர வாகனத்தில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த சண்முகவேல் மீது விழுந்துள்ளது.
எதிர்பாராத விதமாக கொடிக் கம்பம் திடீரென்று விழுந்ததால் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து சண்முகவேல் தலை குப்புற விழுந்துள்ளார். இதனால் அவருடைய பற்கள் அனைத்தும் உடைந்துள்ளது.
நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த போதும் சில கட்சிக்காரர்கள் கொடிகம்பங்கள், பேனர்கள் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.


