சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்க மனு.!

Advertisements

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்க கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் பல்வேறு குளறுபடிகள் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் சீராய்வு மேற்கொள்வதை ஏற்க முடியாது என்றும் பண்டிகை காலத்தில் செய்யப்படும் பணியால் பலர் தங்கள் வாக்குகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பீகாரில் எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வராத நிலையிலும், தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையிலும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மேற்கொள்வது ஏற்க முடியாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *