Advertisements

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் போட்ட வெடிகுண்டு திமுகவிலும் இப்போது பட்டாசு போல் வெடித்து கிளம்புகிறது. தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை இந்த நிலையில் வருகிற 2026 ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படும் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
அதிமுகவை பொறுத்த வரையில் கூட்டணி வைத்திருக்கும் பாஜக தலைவர்களில் ஒருவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் 2026 இல் கூட்டணி ஆட்சி அமையும் என்று அறிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு மறுப்பு தெரிவித்த போதிலும் தொடர்ந்து அமித்ஷா மூன்று முறைக்கு மேல் இதே கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்
அந்த வகையில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறும் என தெரிகிறது சுமார் 50 தொகுதிகளை பெற வேண்டுமென பாஜக மேல் இடம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது இது தவிர அமைச்சரவையில் பங்கு என்றகோஷமும் இருக்கிறது . உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்
தற்போதைய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் என்று கூறி வருகிறார் . இந்த நிலையில் திமுகவிலும் கடுமையான பனிப்போர் ஏற்பட்டுள்ளது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிக இடங்களை கேட்பதுடன் ஆட்சியில் பங்கும் வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளது இதே போல் காங்கிரஸ் கட்சியும் தங்களுக்கு அதிக தொகுதி வேண்டும் அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது
தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்று சமீப காலமாக குரல் கொடுத்து வரும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இது தொடர்பாக மேல் இடத்திலும் பேசி வருகிறார்கள். இதற்கிடையே காங்கிரஸ் மேலிடம் இந்த கோரிக்கை முன் வைக்காது என திமுக தரப்பில் நம்பப்படுகிறது ராகுல் காந்தியும் மு க ஸ்டாலினும் நெருக்கமானவர்கள் என்பதால் இதில் சமாதானம் ஏற்படும் என்று சொல்கிறார்கள்
ஆனால் அதே சமயத்தில் துர்கா ஸ்டாலின் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவிற்கு சோனியா காந்தியும், பிரியங்காவும் வர மறுப்பு தெரிவித்துள்ளனர் . சென்னையில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு சோனியாவும் பிரியங்காவும் மறுத்தது ஏன் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது
ஒருவேளை இந்த விழாவில் கலந்து கொண்டால் இது தேர்தல் பிரச்சாரமாக அமைந்து திமுகவுடன் தங்கள் கோரிக்கைகளை வைக்க முடியாது என சோனியாவும் பிரியங்காவும் நினைப்பதாக சொல்கிறார்கள் . எனவே திமுக காங்கிரஸ் இடையே பிரிவு ஏற்படும் சூழ்நிலைக்கான அச்சாரம் காணப்படுகிறது
கூட்டணி கட்சிகள் இவ்வாறு தொடர்ந்து போர் கொடி பிடித்தால் திமுக வெற்றி பெற்றாலும் கூட்டணி ஆட்சி என்கிற சூழ்நிலை நிலவி வருகிறது . இருந்த போதிலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மிக பலமான நம்பிக்கையுடன் இருக்கிறார் கூட்டணிகள் ஒத்துவரவேண்டும் இல்லாவிட்டால் தனித்து போட்டியிடலாம் என்ற நம்பிக்கையுடன் அவர் செயல்பட்டு வருகிறார் . எதுவாக இருந்தாலும் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தல் ஒரு வகையான குழப்பத்துடன்
Advertisements



