திமுக தேர்தலுக்கு முன் சொன்ன வாக்குறுதி வேறு. நிறைவேற்றும் வாக்குறுதிகள் வேறுபாடாக உள்ளது!பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

தேமுதிக தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

சென்னை, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. அதன்பின்னர் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தே.மு.தி.க. தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. எதிர்காலத்தில் யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம். யாருடனும் கூட்டணியில் இல்லாத நிலையில் பாஜக கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்கு எப்படி அழைப்பு வரும்.

தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். கூட்டணியில் பெயர் மட்டுமே மாறியுள்ளது, மக்களின் நிலை மாறவில்லை. ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் தலைவர்களுக்குள் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. திமுகவுடன் மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் தேமுதிகவுக்கு இல்லை. திமுக தேர்தலுக்கு முன் சொன்ன வாக்குறுதி வேறு. நிறைவேற்றும் வாக்குறுதிகள் வேறுபாடாக உள்ளது. இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *