
உப்பளம் தொகுதி பயனாளிகளுக்கு இலவச மனை பட்டாகளை திமுக கழக துணை அமைப்பாளரும் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிபால் கென்னடி வழங்கினார்.
புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தான் நகரம் மற்றும் வெளி யூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையம் கட்டி முடித்துப் பல ஆண்டுகள் ஆவதால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூபாய்30 கோடி செலவில் புதுப்பிக் கவும், விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டது.
இதற்கான பணிகள் கடந் தாண்டு தொடங்கி பல மாதங்களாக நடந்து வருகி றது. பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இடமாற்றம் செய்யாமல் பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலூர் சாலையில் உள்ள ஏஎப்டி மைதானம் மற்றும் வெங்கட சுப்பாரெட்டியார் சிலை அருகேவுள்ள தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து பணிமனையிலிருந்து பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மார்க்க மாகச் செல்லும் பேருந்து கள் அனைத்தும் ஏஎப்டி மைதானத்தில் இருந்தும், சென்னை, விழுப்புரம், திண்டிவனம் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் எஸ்இடிசி டெப்போவில் இருந்தும் இயக்கப்பட உள்ளது. இதையொட்டி இன்று திமுக உப்பளம்தொகுதி சட்டமன்றஉறுப்பினர் அனிபால் கென்னடி ஏஎப்டி மைதானத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
வரும் 22 .ஏஎப்டி மைதானத்தில் பேருந்துகள் இயங்கும். மேலும் அங்கு உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் அங்கே வழக்கம்போல ஸ்டேண்ட் இயங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர், சட்ட மன்ற உறுப்பினர் கோரிக்கையை ஒப்பு கொண்டார் மேலும் அதிகாரிகளிடம் இதனைத் தெரியப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து உப்பளம் தொகுதி உட்பட்ட வீட்டு மனை பட்டாவினை திமுகஉப்பளம் தொகுதிசட்டமன்ற உறுப்பினர்அனிபால் கென்னடி பயனாளிகளுக்கு வழங்கினார்,
மேலும் அதனைத் தொடர்ந்து மகளிர் தினத்தை முன்னிட்டு உப்பளம் தொகுதிசட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அலுவலகத்தில் மகளிர்களுக்கு புடவைகள் வழங்கினார். உடன் நகராட்சி ஆணையர்கந்தசாமி, செயற்பொறியாளர்சிவபாலன், SPசெல்வம்போக்குவரத்து துறைஆய்வாளர் நாகராஜ், திமுக நிர்வாகிகள் சக்திவேல், ராஜி, இருதய, இருதயராஜ்ராஜ், ராகேஷ், வைத்தீஸ்வர் மற்றும் நேதாஜி நகர் சுய உதவி குழு மகளிர் ஆகியோர் உடன் இருந்தனர்.


