சென்னை :
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அண்ணன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்துக்கு மட்டுமன்றி, தமிழ்நாடு அரசியல் களத்திலும் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.


