
மதுரை:
மதுரையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது,
த.வெ.க. தலைவர் விஜய்யை சமீபத்தில் திராவிட கட்சித்தலைவர் ஒருவர் கூட்டணிக்கு அழைத்தார்.
தற்போது செல்வப்பெருந்தகை இந்தியா கூட்டணியில் சேருங்கள் என அழைத்துள்ளார்.
அவர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையைத் தயவுசெய்து ராகுல் காந்தி மீது வையுங்கள் என அறிவுரை கூறுவது எனது கடமை.
பா.ஜ.க. யாரையும் கூப்பிட வேண்டிய அவசியமில்லை. பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
திமுக பிறக்கும் முன்பே திருவள்ளுவர் திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் சொல்லி வந்திருக்கிறார். அதனை வள்ளுவர் ஆரிய கைக்கூலியாக இருந்துகொண்டு திருவள்ளுவர் கருத்துகளைத் திணித்துள்ளாரெனப் பெரியார் கடுமையாகச் சாடினார்.
அவரது வழியில் வந்த திமுகவினர் வள்ளுவரை பற்றிப் பேச அருகதை இல்லை. குறிப்பாக முரசொலிக்கு அருகதை இல்லை.
திருப்பரங்குன்றம் மலைமீது நடக்கும் பிரச்சனைக்குத் தி.மு.க. அரசு பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் செயலைச் செய்கிறது. அதற்குக் கண்டனங்களைத் தெரிவித்து கொள்கிறேன்.
2026-ல் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும் எனத் தெரிவித்தார்.
