Dhoni:எம்.எஸ். தோனிக்கு புதிய பொறுப்பு.. தேர்தல் ஆணையம் அதிரடி!

Advertisements

81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.

ராஞ்சி:ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவு பெற உள்ளது. இதனால் அதற்குள் அங்குப் புதிய அரசுத் தேர்வு செய்யப்படுவது அவசியம் என்பதால் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது இந்தியா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

முதல்-மந்திரியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். பிரதான எதிர்க்கட்சியாகப் பாஜக உள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சியைப் பிடிக்கப் பாஜக வியூகம் வகுத்து வரும் நிலையில் ஆட்சியைத் தக்க வைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது. இதனால், ஜார்க்கண்ட் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் தேர்தல் ஆணைய அதிகாரி கே.ரவி குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தோனி தனது புகைப்படத்தைத் தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மற்ற விபரங்கள்குறித்து அவரிடம் தொடர்பு கொண்டுள்ளோம். வாக்காளர்களிடம் தேர்தல்குறித்த விழிப்புணர்வு மற்றும் வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் பணியைத் தோனி செய்வார். இது அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வாக்காளர்களிடம் தூண்டும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *