D. Jayakumar: சசிகலா கொடுத்திருக்கக்கூடிய கடிதம் வெத்து பேப்பர்!

Advertisements

எந்தக் காலத்தில் இல்லாத அளவுக்குத் தேர்தல் ஆணையம் சொதப்பி வருகிறது….தேர்தல் ஆணையம் முறையாகச் செயல்பட்டாதாகத் தெரியவில்லையென  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்விமர்சனம் செய்துள்ளார்.

சசிகலா அதிமுக தொண்டர்களுக்குக் கொடுத்திருக்கக்கூடிய கடிதம் வெத்து பேப்பர்,  சசிகலா, டிடிவி ஓபிஎஸ் எல்லாருக்கும் புல் ஸ்டாப் வைக்கின்ற அளவுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோவை மக்களவை தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டு காணவில்லையென அண்ணாமலை கூறுவது கிணற்றைக் காணவில்லையென வடிவேல் கூறுவது போல உள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சென்னை நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தென் சென்னை, மத்திய சென்னை வடசென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள நாடாளுமன்ற தொகுதிகளைச் சார்ந்த வேட்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கப்பின் இன்று நேரில் சந்திக்கின்றனர்.

மேலும் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, பொன்னையன் உள்ளிட்ட சென்னை மற்றும் சுற்றியுள்ள தலைமை கழகச் செயலாளர்களும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்தித்து பேட்டி அளித்தார், அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு  முழுவதும் ஒரு எழுச்சியாக அலை கண்டறியப்பட்டது, மகத்தான வெற்றியை ஜூன் நாலாம் தேதி தமிழக மக்கள் எங்களுக்கு அளிக்கின்ற நிலை உள்ளது

சென்னை மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் தலைமை கழக நிருவாகிகள் எப்படி நாடாளுமன்ற தேர்தலைச் சந்தித்தார்கள் பிறகு மற்ற விவரங்களைப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார்.

ஒட்டுமொத்தமாகத் தேர்தல் ஆணையத்தின் தோல்வியாக இந்தத் தேர்தலைச் சொல்லலாம், வாக்காளர்களின் எதிர்பார்ப்பின் பூர்த்தி செய்வது தான் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு, 100 சதவீதம் வாக்குகளைப் பெற வேண்டும் எனப் பல்வேறு முறை தெளிவாக அழிவுறிக்க பட்டது ஆனாலும் எதையும் பொருட்படுத்தாமல் இந்தத் தேர்தல் பணிகள் நடைபெற்றன.

தேர்தல் முடிந்த பிறகு இயல்பாகத் தேர்தல் வாக்குபதிவு குறித்து அட்டவணை வெளியிடப்படும் கடந்த முறை 2-3 சதவீதம் தவறுதலாக வருவது இயல்பு ஆனால் இந்த முறை 7-8 ஸ்தாகவீதம் தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் கைவிட்டுள்ளது, வாக்களிக்க முடியாவதர்கள் அவர்களது ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டது என்பதே உண்மையாகும்.

மத சார்பு அரசியலை தவிர்க்க வேண்டும், வெறுப்பு அரசியல் இருக்க கூடாது, பிரதமராக இருக்கும்பொழுது அனைவருக்கும் அவர் பிரதமர் அப்படி இருக்கும்போது சிருபான்யினரை இழிவு படுத்தும் வகையில் அவரது பேச்சு உள்ளது, அவர் பேசியது ஏற்றுகொள்ள முடியாத ஒன்று சசிகலா அதிமுக சின்னத்தை வைத்து அளித்த கடிதம் வெத்து காகிதத்திர்க்கு சமம், சசிகலா , ஒப்பி எஸ் , எடப்பாடி யாரும் அரசியலில் இல்லை , 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்கள் அரசியலை விட்டு வெளியேறுவது  உறுதியென கூறினார் .

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *