
தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யக்கூடும் என முன்னதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த பின்னரும் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாமல் கோட்டை விட்டுவிட்டதாக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை மதுரவாயில் பகுதியில் அதிமுக சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் கிறிஸ்துமஸ் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் பல்வேறு திருச்சபை சேர்ந்தவர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அமைப்புச் செயலாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்,
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் :-தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யக்கூடும் என முன்னதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த பின்னரும் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாமல் கோட்டை விட்டுவிட்டது,
முன்னதாகவே அப்பகுதிகளில் படகுகளையும் மீட்பு பணி குழுவினரையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், ஆனால் தற்பொழுது பல கிராமங்கள் தீவாக மாறிய பிறகு நடவடிக்கை மேற்கொள்வதாக திமுக அரசு கூறுகிறது, இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது,
சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்கள் பாதிப்படையும் பொழுது ஏன் பிரதமரை முதல்வர் சந்திக்கவில்லை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அப்பொழுது ஏன் பிரதமரை சந்தித்து அழுத்தம் தரவில்லை, இந்தியா கூட்டணிக்கு செல்லும் போக்கில் பிரதமரை சந்திப்பதாக தெரிவித்துள்ளார் முதல்வர்,
தன்னுடன் இருக்கும் 4 பேரை திருப்திப்படுத்த கம்பி கட்டும் கதையை சொல்லி வருகிறார் ஓபிஎஸ், அதிமுக தொண்டர்களை பொறுத்தவரையில் இனி ஓபிஎஸ்யின் கருத்தை ஏற்க மாட்டார்கள் எனத் தெரிவித்துக் கொண்டார்.

