Cyclone Michaung – Express Trains Cancelled: ரெயில் பயணிகள் தவிப்பு!

Advertisements

இன்று 2-வது நாளாக  எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்துக்கு ஆளானார்கள். குறிப்பாக வட மாநில பயணிகள் காத்து கிடந்தனர்.

சென்னையில் பெய்த அதிகன மழையால் தண்டவாளம் மற்றும் ரெயில்வே பாலத்தில் தேங்கிய மழை வெள்ளம் மெதுவாக வடிந்து வருகிறது. இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரெயில்கள் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

சில ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பு கருதி தெற்கு ரெயில்வே இந்த மாற்றங்களை செய்துள்ளது.எண். 22637 சென்ட்ரல்- மங்களூரு எக்ஸ்பிரஸ், எண். 16116 புதுச்சேரி- எழும்பூர், எண். 06028 விழுப்புரம்- தாம்பரம், எண். 12664 திருச்சி- ஹவுரா ஆகிய ரெயில்கள் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டன.

எண். 06059 கோவை- பாராயுனி, எண். 06034 வேலூர்-சென்னை கடற்கரை, எண். 16054 திருப்பதி- சென்ட்ரல் ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.சென்ட்ரல்- மும்பை லோக்மன்யா எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் மற்றும் ரேணி குண்டா இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்ட்ரல்- மும்பை சத்திரபதி நிலையத்திற்கு புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் சென்ட்ரல்- ரேணிகுணிடா இடையே ரத்து செய்யப்பட்டு ரேணி குண்டாவில் பிற்பகல் 3.55 மணிக்கு புறப்பட்டன.

இதே போல எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ், எழும்பூர்- விழுப்புரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. மதுரை பாண்டியன் எக்ஸ்பிரசும் ரத்து செய்யப்பட்டு விழுப்புரத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கு செல்லும்.

எழும்பூர்- மங்களூரு எக்ஸ்பிரஸ் எழும்பூர்- விழுப்புரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் அதிகாலை 1.37 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். சென்ட்ரல்- பெங்களூர் லால்பார்க் எக்ஸ்பிரஸ் பகல் 3.30 மணிக்கு பதிலாக மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

சென்ட்ரல்- மைசூர் எக்ஸ்பிரஸ் தாமதமாக பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு சென்றது. சென்ட்ரல்- ஜோலார் பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ் இன்று மாலை 5.55 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அரக்கோணத்தில் இருந்து இரவு 7.05 மணிக்கு புறப்பட்ட செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல், எழும்பூரில் இருந்து ரெயில்கள் ரத்து மற்றும் வேறு இடங்களில் இருந்து புறப்பட்டு செல்வதால் பயணிகள் சிரமத்துக்கு ஆளானார்கள். குறிப்பாக வட மாநில பயணிகள் காத்து கிடந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *