Cyclone Michaung Chennai: திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் நிவாரணம் வழங்கினார்!

Advertisements

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் சோளம்பேடு  பகுதியில் மழை வெள்ளத்தால்  பாதித்த பொதுமக்களுக்கு உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நிவாரண உதவிகளை வழங்கினார்.

மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் புயல் மழை பெய்தபோது   பல பகுதிகளில் தண்ணீர் நின்று பொதுமக்களின் வாழ்வாதாரம் இல்லாமல்  தவித்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின் பேரில்  திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அவர்கள் சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் கலைஞர் நகர்குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து பெரும் பாதிப்பு  ஏற்பட்டது.

அப்பகுதியில் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சாமு நாசர் அவர்கள்  மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட  10000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி பருப்பு பால் பிரட் பெட்ஷீட் மற்றும் காய்கறிகள் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ஆவடி மேயர் உதயகுமார் நகர கழக செயலாளர் பேபி சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *