
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் நாளை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் டிட்வா’ புயல் உருவாகியது. இந்த புயல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடற்கரை வழியாக வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நாளை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், காவிரிப்படுகை மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்ளில் மிக கனமழைப் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவரப்படி டிட்வா புயல் இலங்கையின் கடலோரப் பகுதியிலும், அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலிலும் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புதுச்சேரியில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 380 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 490 கி.மீ தொலைவிலும் புயலின் மையம் அமைந்துள்ளது. என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.


