
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 252 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் ஓடிஐ தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
கடந்த சனிக்கிழமை, நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் போட்டியில் பலப்பரிட்சை நடத்திக்கொண்டிருந்தது. அப்போது முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 330 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி, பாகிஸ்தான் அணி விளையாடிக்கொண்டிருந்தது.
அப்போது, இன்னிங்ஸின் 37வது ஓவரில் டீப் ஸ்கொயர் லெக்கில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ரச்சின் ரவீந்திரா, மைக்கேல் பிரேஸ்வெல் அடித்த பந்தைக் கேட்ச் பிடிக்க முயன்றார்.
ஆனால் பந்து அவரது கைகளுக்கு மேலே சென்று நெற்றியில் பலமாக மோதியது. இதனால் அவர் தடுமாறி கீழே சரிந்தார்.
சற்று நேரத்தில் மருத்துவ உதவியுடன் மைதானத்தை விட்டு ரச்சின் ரவீந்திரா வெளியேறினார். இதையடுத்து மைதானத்தில் ரசிகர்கள் கைத்தட்டி அவரை உற்சாகப்படுத்தியதால் தான், அங்கு நிலவிய அமைதி விலகியது.
ஆனால் ரச்சின் ரவீந்திராவின் உடல்நிலை குறித்து நியூசிலாந்து அணி இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடவில்லை.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 252 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் ஓடிஐ தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
சமீபத்தில் நிறைவடைந்த உலகக் கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா, 10 போட்டிகளில் 578 ரன்கள் குவித்திருந்தார். மேலும் வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, விரைவில் அணிக்குத் திரும்புவாரென ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
