
தென்னாப்ரிக்கா அணி வெற்றி!
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில், தற்போது வரை 19 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள தென்னாப்ரிக்கா, புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.
இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்குப் பஞ்சாப் மாநிலம் தர்மசாலாவில் உள்ள மைதானத்தில்போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, தென்னாப்ரிக்காவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.இதையடுத்து களமிறங்கிய தென்னாப்ரிக்காஅணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். கடைசியாக தென்னாப்ரிக்காஅணி 50 ஒவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை எடுத்தது.
விக்கெட் வீழ்ச்சி:4-1 (குயின்டன் டி காக், 0.2) 125-2 (ராசி வான் டெர் டுசன், 19.4) 164-3 (ரீசா ஹென்ட்ரிக்ஸ், 25.2) 233-4 (ஐடன் மார்க்ரம், 35) 243-5 (டேவிட் மில்லர், 36.3) 394-6 (ஹென்ரிச் கிளாசென், 49.1) 398-7 (ஜெரால்ட் கோட்ஸி, 49.5)
400 ரன்களை எடுத்தால் வெற்றியென அதனைத் தொடர்ந்து விளையாடிஇங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். கடைசியாக இங்கிலாந்து அணி 22 ஒவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்துத் தோல்வியைத் தழுவியது.

