Sehar Shinwari: இன்று இல்லையென்றால் என்ன ? நாளை ஜெயிப்போம்ல..

Advertisements

இன்று இல்லையென்றால் என்ன ? நாளை ஜெயிப்போம்ல.. கொக்கரிக்கும் பாகிஸ்தான் நடிகை!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிநடைபெற்று வரும் நிலையில்  இந்தியா பாகிஸ்தானை வாரி சுருட்டியது. அதுமட்டுமல்ல சும்மா கில்லி போல ஆடி வருகிறது. புள்ளிபட்டியளிலும் முன்னேறி வருகிறது. பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததை ஜீரணம் செய்து கொள்ள முடியாத பாகிஸ்தானின் நடிகை ஷெஹர் ஷின்வாரி இரண்டாவது முறையாக இந்தீயாவுக்கு எதிராக அறிக்கை விட்டுள்ளார்.

பாகிஸ்தானை 191 ரன்களில் சுருட்டிய இந்தியா புனேயில் அக்டோபர் 19-ஆம் தேதி வங்க தேசத்தை எதிர்கொண்ட போது இந்த நடிகை, இந்தியாவை வங்கதேசம் வீழ்த்துமேயானால் நான் வங்கதேச வீரருடன் ஒரு நாள் டேட்டிங் போக தயாராக உள்ளேன் என்று பகிங்கரமாக தனது X தளத்தில் பதிவிட்டார்.

ஆனால் வங்கதேசம் இந்தியாவிடம் தோற்றுப் போனது.  இதனால்  விரக்தியடைந்த  நடிகை மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். கீழே விழுந்தாலும் மண்ணு ஒட்டல கதையாக , பாகிஸ்தானைத் தொடர்ந்து வங்கதேசமும் இந்தியாவிடம் தோல்வி அடைந்தாலும் நான் இரும்பு போல இதயத்துடன் உறுதியாக உள்ளேன்.

நான் `நம்பிக்கையை இன்னும் இழக்கவில்லை’  இன்று இல்லையென்றால் என்ன ? நாளை ஜெயிப்போம்ல அப்படின்னு  கொக்கரித்து அறைகூவல் விடுத்துள்ளார்.இந்தியா நியூசிலாந்துடன் மோதும் போட்டியில் நிச்சயமாக நியூசிலாந்து வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக தனது காழ்ப்புணர்ச்சியையும், பொறாமை குணத்தையும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்.

விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல்  விபரீதமாக கருத்துப் பதிவிடும் அவரை என்னவென்று சொல்வது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *