
நெதர்லாந்து அணி வெற்றி.
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில், தற்போது வரை 14 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன.
இந்நிலையில், இன்றைய லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள தென்னாப்ரிக்கா, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணியை எதிர் கொண்டது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா தனது அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.தர்மசாலாவில் மழையுடன் பலத்த காற்று வீசியதால், போட்டித் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.இதையடுத்து மழைநின்றதும் போட்டி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே தடுமாறினர்.
அடுத்து அடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார். தென் ஆப்ரிக்கா அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் சேர்த்துள்ளது. முடிவில் ஒவரில் ரன்களை எடுத்தது. அதனைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். கடைசியாக 40.3 ஒவரில் 215 ரன்களை எடுத்துத் தென் ஆப்ரிக்கா அணி தோல்வியடைந்தது.

