Puducherry: என்.ஆர்., காங் – பா.ஜ., கூட்டணி மீது காங்கிரஸ் கடும் தாக்கு!

புதுச்சேரியில் வேலை வாய்ப்பை உருவாக்க, என்.ஆர்., காங் – பா.ஜ., கூட்டணி அரசு, எந்த நடவடிக்கையும், மேற்கொள்ளவில்லையென, காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டி உள்ளார்.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இண்டியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மாநில ‌எல்லையான கனகசெட்டி குளத்தில் உள்ள, பிள்ளையார் கோவிலில், வழிபாடு செய்து பிரசாரத்தை துவக்கினார்.

இதையடுத்து பிரச்சாரத்தில் பேசிய அவர், மின்துறையை தனியார் துறைக்கு விற்க, இங்குள்ள ஆளும் கூட்டணி தயாராகி கொண்டிருக்கிறது.புதுச்சேரி மாநிலத்தில் உள்ள துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்டவைகளை விற்பதற்கு உண்டான நடவடிக்கையை, அவர்கள் மேற்கொண்டுள்ளனர். ஆனால், வேலைவாய்ப்பை உருவாக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அத்தியவசிய பொருட்களான அரிசி, உளுந்து, சமையல் எண்ணெய், பூண்டு, புளி உள்ளிட்ட அனைத்தின் விலையும் உச்சத்தை எட்டியுள்ளது.இவற்றைக் குறைக்க பா.ஜ., கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தப் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் ஷாஜஹான், இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம், எம்.எல்.ஏ., க்கள், கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *