Communist Party of India: ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நோட்டீஸ்!

Advertisements

காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிபப்பட்டுள்ளது.

புதுடெல்லி: கடந்த 2018-19ம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாகத் தாக்கல் செய்ததற்காகக் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காகச் சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் உள்பட காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது.

இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை முறையாகத் தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகப் பழைய பான் எண்ணை (PAN Number) பயன்படுத்தி வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிபப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி ரூ.1,823 கோடி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *