Coimbatore Bomb Threat: தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Advertisements

பிரதமர் மோடி  தமிழகம் வரும் நிலையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்விடுத்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: பிரதமர் மோடி தென் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய தினம் கோவையில் நடக்கும் வாகன பேரணியில் பங்கேற்கிறார்.இந்தநிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறிக்கை தொலைபேசி மூலமாக வந்த அழைப்பில் தனியார் பள்ளி பள்ளியில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கோவை மாநகர் காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி கோவையில் இன்று மாலை பாஜக சார்பில் நடைபெறும் வாகன பேரணியில் கலந்து கொள்ள உள்ள நிலையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் புரளி என்பது தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *