Anbumani Ramadoss : திமுக அரசிற்கு நிர்வாக திறமை என்பதே கிடையாது !

திமுக அரசிற்கு நிர்வாக திறமை என்பதே கிடையாது என்று, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்,  சென்னை எழும்பூரில் பாமகவினர் போராட்டத்தில்  ஈடுபட்டனர். போராட்டத்தில் பேசிய அன்புமணி, தமிழக அரசு, மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என்றும்,  இன்றும் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுவது பெரும் மோசடி என்றும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசிற்கு நிர்வாக திறமை என்பதே கிடையாது என்றும், பணத்திற்காக தனியாரிடம் மின்சாரத்தை வாங்கி கொண்டிருப்பதாக கூறிய அவர், அரசு துறைகளில் மின் உற்பத்தியை நிறுத்தி விட்டதாக அன்புமணி குற்றச்சாட்டி உள்ளார். இதில், ஏராளமான பாமக-வினர் கலந்து கொண்டு, மின் கட்டண உயர்வையும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *