
வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை கொத்தவரங் காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் உடல் உஷ்ணம் குறையும். அதிக சக்தியை அதிகம் பெற முடியும்.நார்ச்சத்து அதிகம் உள்ள காய்.
கொத்தவரங்காய்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்னைகளில் நிவாரணம் ஏற்படும். ஒரு சிலருக்கு பல காரணங்களால் உடலுக்கு தேவையான சத்துகளும் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகிறது.
நார்ச்சத்து சத்துக்குறைபாடு கொத்தவரங்காய் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் தடுக்கலாம். இனி கொத்தவரங்காய் கொண்டு சுவையான பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
கொத்தவரங்காய் பக்கோடா செய்யத் தேவையான பொருட்கள்-
கொத்தவரங்காய் – கால் கிலோ
கரம் மசாலா – அரை டீஸ்பூன்பச்சை மிளகாய் – 5

பூண்டு – 5 பல்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
மைதா மாவு – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் துாள் – ½ டீஸ்பூன்
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – 10

சீரக துாள் – ½ டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
கொத்தவரங்காய் பக்கோடா செய்முறை-
கொத்தவரங்காய் சுத்தமாக கழுவி, நீர் துடைத்து விட்டு, தனியே வைக்கவும். முந்திரி பருப்பு அரை மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.
அகலமான பாத்திரத்தில், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லி துாள், சீரக தூள் சேர்த்து, சில துளிகள் நீர் தெளித்து கலந்து கொள்ளவும்.
இதில், இரண்டாக கீறிய பச்சை மிளகாய், நீரை வடித்து விட்டு முந்திரி, ஒன்றிரண்டாகத் தட்டிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து கலந்த பின்,
கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு சேர்த்து, பக்கோடாவிற்கு பிசைவது போல பிசையவும்.
எதையும் நொறுக்கி விடாமல், மசாலா சீராக கலக்கும் விதமாக மென்மையாக பிசையவும். அதன் பின், நறுக்கிய கொத்தவரங்காய் சேர்த்து பிரட்டி, சில நிமிடங்கள் வைத்து, எண்ணெய் காய்ந்ததும், பிரட்டி வைத்த கொத்தவரங்காய் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
நன்கு ஆறிய பின் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால், மொறு மொறுவென்று இருக்கும்.
இப்போது சூப்பரான கொத்தவரங்காய் பக்கோடா தயார்..



