கடவுளின் மகனாக போற்றப்படும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் , அவர் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர் கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார் கள். கிறிஸ்மஸ்,அன்பு, அமைதி மற்றும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு பண்டிகையாகும்.கிறிஸ்மஸ் அன்று குடில் அமைப்பது,அதன் அருகில் கிறிஸ்துமஸ் மரத்தை வைப்பது அதை விளக்குகளால் அலங்கரிப்பது போன் றவற்றில் கிறிஸ்தவர்கள் ஈடுபடுகிறார்கள்.
கிறிஸ்மஸ் மரம் இல்லாமல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்நிறைவுபெறாது. அதன் வரலாறு சுவையானது. ஜெர்மனியில் கிபி பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த போனி பேஸ் என்பவர் மூடநம்பிக்கைகளை கடுமையாக எதிர்த் து வந்தார். இதற்காக ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்து வந்தார். ஓக் மரம் ஒன்றை மக்கள் வழிபடுவதைக் போனி போஸ் கண்டுக்கடுங்கோபம் கொண்டு அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார். மரம் மீண்டும் துளிர்த்து விடாமல் இருப்பதற்காக , அந்தமரத்தின் வேர்ப் பகுதியை அடியோடு பெயர்த்தெடுத்தா ர். ஆனால் மரம் இருந்த அந்த இடத்திலிருந்து அடுத்த சில தினங்களிலேயே ஒக் மரக்கன்று முளைத்து விறு விறு என்று வளர்ந்துவிட்டது.
இதைக்கண்ட மக்கள்இயேசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின்அடையாளமாகபார் க்கத்தொடங்கினர். தனது வழிபாட்டை முடித்துக் கொண்டு பேஸ் மீண்டும் அந்த வழியாக திரும்பிய போது தான், வெட்டி போட்ட மரம் மீண்டும் வளர்ந்திருப்பதை கண்டு வியந்து அதன் அடியில் முழங்கால் இட்டு ஜெபம் செய்யத் தொடங்கினார். இதனால் கிறிஸ்த வழிபாட்டில் பத்தாம் நூற் றாண்டில் ஒக்மரம் உயிர்ப்பின் அடையாளமாக இடம் பெற தொடங்கியது. அன்று முதல் கிறிஸ்மஸ்மரம் பண்டிகையின் முக்கிய அடையாளமாக மாறிவிட்டது.
15 ஆம் நூற்றாண்டில் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி ஆதாம் ஏவாள் தினமாக கொண்டாடடும்வழக்கம்இருந்தது.வி லக்கப்பட்ட மரத்தின் கனியை தின்றதால் பாவத்துக்குள் தள்ளப்பட்ட ஏதேன் கா லத்தை நினைவு கூறும் விதமாக மரத்தை ஆப்பிள் போன்ற பழங்களால் அலங்கரித்து மக்கள் அந்த நாளை கொண்டாடி வந்தார்கள். இதுவே பிறகு கிறிஸ்துமஸ் மரமாக மாறிவிட்டது. கிறிஸ்மஸ் மரத்தின் கிளைகள்
சிலுவையின் அடையாளத்தை கொண்டு இருப்பது சிறப்பாகும். அதே போல கிறிஸ்மஸ் மரத்தின் முக்கோண வடிவம் தந்தை,மகன் ,தூய ஆவி என்னும் இயேசுவின் மூன்று பரிமாணங்களையும் குறிப்பதாகவும்.
எனவே இயேசு மனிதம் உருவான நாளை மரத்தை அலங்கரிப்பதன் மூலம் கொண்டாடுவது அதிக அர்த்தமுடையது என்றும் கூறப்படுகின்றன.
மார்ட்டின் லூதர் கிீங் பனி வெளியில் நடந்து சென்ற போது , சிறு பச்சை மரங்களின் மீது படர்ந்திருந்த பனி வெளிச்சத்தில் அழகுடன் ஒளிர்வதைக் கண்டார். உடனே ஒரு ஓக் மரத்தை எடுத்து அதை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து கிறிஸ்து பிறப்பு விழாவில் பயன்படுத்தினார். அன்றுமுதல் கிறிஸ்தவ விழாக்களில் கிறிஸ்துவ மரம் இடம் பெற்றது.

