Chhattisgarh: 29 மாவோயிஸ்ட்கள் சுட்டுகொலை.. சத்தீஸ்கரில் பதற்றம்!

Advertisements

சத்தீஸ்கரில்  மாவோயிஸ்ட்கள் 29 பேர் பாதுகாப்பு படை அதிகாரிகளால் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவை பொருத்தவரை, நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது. பிற மாநிலங்களைக் காட்டிலும் குறிப்பாக, ராய்பூரை தலைநகராகக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களைக் களையெடுக்கும் பணியில், பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சத்தீஸ்கரில் உள்ள கான்கேர் மாவட்டத்தில், நேற்று நக்சலைட்டுகளின் நடமாட்டம் தெரிந்துள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு படையினர், அவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்தத் தேடுதல் வேட்டையின்போது, நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புபடையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சூடு ஏற்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கி சூடு, நேற்று மதிய வேளையில் நடைப்பெற்றிருக்கிறது. ஏகே-47, INSAS வகை துப்பாக்கிகள் இன்னும் சில பயங்கர ஆயுதங்களைத் தீவிரவாதிகள் இதில் உபயோகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பினாகுண்டா எனும் கிராமத்திற்கு அருகே நடைப்பெற்ற இந்தச் சண்டையில், 3 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். மேலும், மாவட்ட ரிசர்வ் காவலர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தாக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, மாவோயிஸ்டுகள் 29 பேர் இந்தச் சண்டையில் உயிரிழந்துள்ளதாகப் பாதுகாப்பு படையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் மாவோயிஸ்டுகளின் தலைவர் ஷங்கர் ராவ்வும் உயிரிழந்துள்ளார். இவரது தலைக்கு ரூ.25 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சண்டையை அடுத்து, குற்றவாளிகள் பயன்படுத்திய பயங்கர ஆயுதங்கள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பாங்கர என்கவுண்டர், நேற்று பிற்பகல்1:30 மணி அளவில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதில், சத்தீஸ்கர் மாநில போலீசாரின் ஒரு பீவான ரிசர்வ் படை மற்றும் எல்லை பாதுகாப்பு படை இணைந்து நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

அதே போல, கடந்த மாதம் இதே தற்போது துப்பாக்கி சூடு நடைப்பெற்ற மாவட்டத்திலேயே இன்னொரு துப்பாக்கி சூடு சம்பவமும் நடைப்பெற்றுள்ளது. இதில், தீவிரவாதி ஒருவரூம், ஒரு காவலரும் உயிரிழந்துள்ளனர். இந்தத் துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது துப்பாக்கி, சில அதிபயங்கர வெடிபொருட்கள் மற்றும் குற்றவாளிகள் பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நேற்றைய துப்பாக்கி சூடு சம்பவம்குறித்து பேசிய போலீஸார், பாதுகாப்பு படை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தீவிரவாதிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இதனால் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை எழுந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *