ChennaiCrime:1 ரூபாய் ஊறுகாய்க்காக கொலை வெறிதாக்குதல் – தலைநகரை அலறவிட்ட வாலிபர்கள்!

Advertisements

ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட் கேட்டு மளிகை கடைக்காரர்மீது கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அசாருதீன் மற்றும் முகமத் உசேன் இருவரும் அதே பகுதியில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த கலையரசன், வினோத் உள்ளிட்டோர் ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட் கேட்டதாகவும், ஆனால் ஒரு ரூபாய் பாக்கெட் இல்லை எனவும், ஐந்து ரூபாய் ஊறுகாய் பாக்கெட் மட்டுமே இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட வினோத் ஆத்திரமடைந்து மளிகை கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈட்டுப்பட்டுள்ளார். அப்போது மளிகை கடைக்காரர் அசாருதீன் என்பவரை வினோத் கத்தியால் வெட்டியுள்ளார்.

இதில் காயமடைந்த அசாருதீன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம்குறித்து கோடம்பாக்கம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், தலைமறைவாக உள்ள வினோத் மற்றும் கலையரசன் ஆகிய இருவரையும் காவல்துறை தேடி வருகின்றனர்.இந்தச் சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *