
சென்னை: ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் உல்லாசத்திற்கு அழைத்து வரப்பட்ட இளம் அழகி செய்த காரியத்தால் பதறிப்போய்விட்டார் ஐ.டி ஊழியர் ஒருவர். இது தொடர்பான புகாரையும் போலீசில் தந்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருககு 30 வயதாகிறது.. என்ஜினியரிங் படித்துவிட்டு, பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.. இன்னும் கல்யாணம் ஆகவில்லை.
இவர் “லோகேன்டே” என்ற டேட்டிங் செயலிமூலம், இளம்பெண்களைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருப்பது வழக்கமாம். தன்னுடைய வீட்டில் யாருமில்லாதபோது இப்படி பெண்களை அழைத்து வருவாராம் குமார். அப்படித்தான், 25 வயது இளம்பெண் ஒருவர் குமாருக்கு இந்த ஆப்பில் பழக்கமாகியிருக்கிறார்.. 3 மணி நேரம் உல்லாசமாக இருப்பதற்கு ரூ.6 ஆயிரம் என்று அந்தப் பெண்ணிடம் பேரமும் பேசியுள்ளார். இதற்கு அந்தப் பெண்ணும் சம்மதம் தந்துள்ளார்.
நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாததால் , அந்த இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்தார் குமார்.. இருவரும் உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.. பிறகு அந்தப் பெண்ணுக்குப் பேசியபடி, ரூ.6 ஆயிரம் பணம் தந்து அனுப்பிவைத்தார்.. அதற்குப் பிறகு குமார் குளிப்பதற்காகப் பாத்ரூம் சென்றுள்ளார்.

குளித்து முடித்துவிட்டு வந்து பார்த்தால், பெட்ரூமில் உள்ள பீரோ சரியாக மூடாமல் இருப்பதை பார்த்தார்.. இதனால் சந்தேகமடைந்த குமார், பீரோவை திறந்து பார்த்தால், துணிகள் கலைந்திருந்தன. அத்துடன், பீரோவில் இருந்த 34 கிராம் மதிப்புள்ள தங்க காசுகளும் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குமாருக்கு, உல்லாசத்திற்கு அழைத்து வந்த பெண்ணின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதனால், லோகேன்டோ ஆப் மூலம் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொள்ள முயன்றார்.
ஆனால் அந்தப் பெண்ணோ, தன்னுடைய அக்கவுண்ட்டை மொத்தமாக டெலிட் செய்துவிட்டு, அந்தச் செயலியிலிருந்து வெளியேறிவிட்டார்.. இதனால் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொள்ளவும் முடியாமல், இதைப் பற்றி வெளியிலும் சொல்ல முடியாமல், குமார் குழம்பினார். எனவே, வேறுவழியின்றி அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, விபச்சார பெண்மீது புகார் தந்தார். இந்தப் புகாரின் பேரில், போலீசாரும் குமார் வீட்டு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அந்தப் பெண்ணை அடையாளம் கண்டுள்ளனர்.. ஆனால் அந்தப் பெண் தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.. தீவிரமாகத் தேடி கொண்டிருக்கிறார்கள். உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு 5 பவுன் நகையை ஐடி நிறுவன ஊழியர் இழந்து நின்றுகொண்டிருக்கிறார்.



