துப்புரவுப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Advertisements

சென்னை மாநகராட்சிக் கட்டடத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துப்புரவுப் பணியாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் இராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் துப்புரவுப் பணியைத் தனியாருக்குக் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆகஸ்டு முதல் நாளிலிருந்து துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்துக்கு அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியன ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மாநகராட்சிக் கட்டடத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுமதி இல்லாத இடத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டத்தை நடத்திக்கொள்ளலாம் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. போராட்டம் நடைபெறும் இடத்திலிருந்து தொழிலாளர்களை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறித் தேன்மொழி என்பவர் வழக்குத் தொடுத்ததால் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *