
அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.நாளுக்கு நாள் சாமானிய மக்களின் ஆசை பட்டியலில் இருந்தே வெளியேறும் நிலைக்கு தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
ஒரு சவரன் ஒரு லட்சத்தை எட்டும் நிலைக்கு சென்று கொண்டிருப்பதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
அந்த வகையில் நேற்று அக்டோபர் 15ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,860க்கும், சவரனுக்கு ரூ.280 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.94,880க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று அக்டோபர் 16ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,900க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.95,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



