Tamil Nadu: அதிகாரி வீட்டில் சி.பி.ஐ., ‘ரெய்டு’!

சென்னை:

பழைய இரும்புகளை டெண்டர் விட்டதில் முறைகேடு செய்ததாக, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட, சென்னை துறைமுக அதிகாரி வீடு உட்பட மூன்று இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை துறைமுகத்தில் இணை இயக்குநராக இருப்பவர் புகழேந்தி; மயிலாப்பூரில் வசிக்கிறார். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரும்பு பொருட்கள் பயன்பாடின்றி, துறைமுகத்தில் குவிந்து கிடந்துள்ளன.

பழைய இரும்பு என, அவற்றை ‘டெண்டர்’ விட்டதில் முறைகேடு செய்ததாகப் புகேழந்தி மீது குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்கள் நேற்று, புகழேந்தி வீட்டில் சோதனை நடத்தினர்.

பழைய இரும்புகளை டெண்டர் எடுத்த, சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சண்முகம் மற்றும் ராயப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவன மேலாளர் சேகர் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *