Advertisements

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்திற்கு என்ன சின்னம் கிடைக்கப் போகிறது என்பதில் தமிழக மக்கள் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள் . முதல் கட்டமாக ஆட்டோ சின்னம் வழங்கப்படும் என தகவல் வெளிவந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூலம் ஆட்டோ ஓட்டுநர்கள் மிகவும் பிரபலமானார்கள்.
தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் ஆட்டோ ஓட்டுநர்கள் இருப்பதால் ஆட்டோ சின்னம் தமிழக வெற்றி கழகத்திற்கு பலமான சின்னமாக இருக்கும் என்று கருதப்பட்டது . ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் தங்கள் ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக பேசுவார்கள் என கருதப்பட்டது .
இந்த நிலையில் தற்பொழுது தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் கமிஷன் விசில் சின்னத்தை ஒதுக்கி உள்ளது தெரிய வந்திருக்கிறது .. தமிழகத்தைப் பொறுத்த வரையில் தேர்தல் சின்னம் என்பது மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. பெரும்பாலான கிராமத்து மக்கள் மட்டுமல்ல நகரத்து மக்களிடம் கூட சின்னம்தான் நிலைத்து நிற்கிறது .
அந்த வகையில் ஒரு காலத்தில் காங்கிரஸின் கைச்சின்னம் மிகப் பிரபலமாக இருந்தது . தற்பொழுது , தமிழ்நாட்டை பொருத்தவரையில் இரட்டை இலை சின்னமும் உதயசூரியன் சின்னமும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது . இதற்கு அடுத்தபடியாக பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சின்னமும் தற்பொழுது முக்கிய இடம் வைத்து வருகிறது . வட மாவட்டங்களைப் பொறுத்தவரையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாம்பழ சின்னமும் பிரபலமாகி இருக்கிறது .
இந்த நிலையில் , தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு ஆணை 1968 விதிகளின் கீழ் தங்களுக்கு தேர்தல் சின்னத்தை ஒதுக்க கோரி தமிழக வெற்றி கழகம் சார்பில் மனுதரப்பட்டது. இதில் தங்களுக்கு பொதுச் சின்னமாக 10 சின்னங்களை தமிழக வெற்றி கழகம் சார்பில் குறிப்பிட்டு இருந்தனர் . பொதுவாக ஒரு சின்னம் என்பது முதலில் மனு செய்பவர்களுக்கு அந்த சின்னம் வழங்கப்படும் .
அந்த வகையில் , தமிழக வெற்றி கழகம் சார்பில் தங்களுக்கு தேவையான முதல் சின்னம் என விசில் சின்னத்தை குறிப்பிட்டிருந்தனர் ,
இதன் பின்னணியில் , சில தகவல்கள் சொல்லப்படுகிறது . விஜய் நடித்து 2019 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பிகில் என்ற திரைப்படம். விளையாட்டு சம்பந்தமான இந்த படத்தில் நடிகர் விஜய் விசிலை பயன்படுத்தி இருப்பார்.
இது மட்டுமல்லாமல் பிரபலமான ஜோதிடர் ஒருவரும் விசில் சின்னத்தை தேர்ந்தெடுக்கும்படி நடிகர் விஜய்க்கு தகவல் சொன்னதாக சொல்லப்படுகிறது . இது மட்டும் அல்லாமல் சுவர்களில் வண்ணம் தீட்டுவதற்கும் தொலைநோக்கு பார்வையில் கண்களுக்கு தெளிவாகத் தெரியும்படியும் விசில் சின்னம் இருக்கும் என்பதாலும் இந்த சின்னத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
இதன் அடிப்படையில் தான் விசில் சின்னத்தை முதல் சின்னமாக கேட்டு தவெக மனு செய்தது. இதற்கிடையே மாற்றுக் கட்சியினர் இது குறித்து பேசும்போது ஏற்கனவே நடிகர் விஜய்க்கு விசில் அடித்தான் குஞ்சுகள் தான் ரசிகர்களாகவும் தொண்டர்களாகவும் இருக்கிறார்கள். எனவே அவர்கள் விசில் அடித்து ஆடுவதற்கு வசமாக இந்த சின்னம் கிடைத்திருக்கிறது .
இனி தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் கையில் விசில் உடன் தான் திரிவார்கள் என்று பேசி வருகின்றனர் .
Advertisements

