Car Accident: 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!

Advertisements

மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை கே.புதூரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 36). இவர் தனது காரில் 5 பேர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். கொடைக்கானலில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு செல்ல திட்டமிட்டனர்.

இன்று அதிகாலை வத்தலக்குண்டு சாலையில் பூலத்தூர் பிரிவு அருகே கார் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

அதிர்ஷ்டவசமாக அந்த கார் ஓங்கி உயர்ந்த 2 மரங்களுக்கு இடையில் சிக்கியது. இதனால் காரில் இருந்தவர்கள் உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர். அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். இது குறித்து தாண்டிக்குடி போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து காரில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டனர்.

பின்னர் படுகாயமடைந்த டிரைவர் சரவணன், மதுரையைச் சேர்ந்த தர்மராஜ் (60) ஆகிய இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *