BS Yediyurappa: பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்!!

Advertisements

பெங்களூரு: 16 வயது சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவருக்கு சிஐடி, கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இவருக்கு வயது 80. இவர் தம்மிடம் உதவி கேட்டு வந்த 16 வயது சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக எடியூரப்பா மீது பெங்களூரு சதாசிவம் நகர் போலீஸ் ஸ்டேஷனில் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கைக் கர்நாடகா மாநில சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் – சிஐடி விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே எடியூரப்பா மீது பலாத்கார புகார் கொடுத்த சிறுமியின் தாய் திடீரென இறந்தார். நுரையீரல் புற்று நோய் காரணமாக அந்தத் தாய் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. எடியூரப்பாவை கைது செய்ய வேண்டும் எனச் சிறுமியின் சகோதரர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து எடியூரப்பாவை கைது செய்ய சிஐடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்பட உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *