Brahmotsavam Festival: 18-ந் தேதி விழா துவக்கம்!

Advertisements

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழாவருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 22-ந்தேதி கருட சேவை 23-ந் தேதி தங்க தேரோட்டம் 25-ந் தேதி திருத்தேர் 26-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

திருப்பதி: திருப்பதி மலையில் ஏழுமலையான் அடி வைத்த நாளில் அவர் பிரம்மதேவனை அழைத்து உலக நன்மைக்காகத் தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று பிரம்மதேவர் புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரம் அன்று நிறைவுபெறும் விதமாக 9 நாட்கள் உற்சவத்தை நடத்தினார்.

பிரம்ம தேவர் நடத்திய உற்சவம் என்பதால் திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா பிரமோற்சவம் என்று அழைக்கப்பட்டு வருவதாகப் புராணங்கள் கூறுகிறது. இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 22-ந்தேதி கருட சேவை 23-ந் தேதி தங்க தேரோட்டம் 25-ந் தேதி திருத்தேர் 26-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து வருகின்றனர். பிரமோற்சவ நாட்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும், வாகன சேவைகள் நடைபெற உள்ளன.

அப்போது 9 மாநிலங்களைச் சேர்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரமோற்சவத்தின் முதல் நாள் மாநில அரசின் சார்பில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். கருட சேவை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிவார்கள். அப்போது பக்தர்கள் நெரிசலின்றி எளிதில் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளைத் தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர். கருட சேவையின்போது நான்கு மாட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.

பக்தர்கள் வந்து செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது. மாடவீதிக்கு வெளியே காத்திருக்கும் பக்தர்களை வரிசையில் அனுமதித்து கருட சேவையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கருட சேவையின்போது 2 அல்லது 3 மணி நேரம்வரை பொறுமையாகக் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதற்குப் பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அதிகாரிகள் வேண்டுகோள் எடுத்துள்ளனர். திருப்பதி பிரமோற்சவ விழாவை வெட்டி ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தில் சென்னை, வேலூர் ஆகிய இடங்களுக்குக் கூடுதலாகச் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *