Bomb Threat: வெடிகுண்டு மிரட்டல்.. விமான நிலையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு!

Advertisements

கே.கே.நகர்: கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு நேற்று மர்மநபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்களைத் தீவிர சோதனைக்குப் பின்பு அனுமதித்து வருகின்றனர். விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் தமிழக போலீசாரின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், சோதனை செய்யப்பட்ட பின்பு வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றது.

அதற்கு அடுத்தபடியாக விமான நிலைய நுழைவு வாயிலில் மோப்பநாய் உதவியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயணிகளின் உடைமைகளைச் சோதனை செய்து வருகின்றனர்.

இதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களது உடமைகளை பிரித்துச் சோதனை செய்யும் நிலை இருந்து வருகிறது.

மேலும் பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவிக்கொண்டு சோதனை செய்யப்பட்ட பின்பு முனைய வளாகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். மற்றும் பயணிகளை ஸ்கேனர் கருவிக்கொண்டு விமான நிறுவனத்தினர் சோதனை செய்யப்பட்ட பின்பே விமானத்தில் பயணம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்தச் சோதனையானது நேற்று முன்தினம் இரவு முதல் நடைபெற்று வருகிறது. எனவும் மறு அறிவிப்பு வரும் வரை இந்தச் சோதனை தொடரும் என மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். இந்தச் சோதனையில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னதாகவும், வெளிநாட்டு பயணிகள் 3 மணி நேரத்துக்கு முன்னதாகவும் விமான நிலையத்துக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *