Bike Accident: அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரண்டு பேர் பலி!

Advertisements

திட்டக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள்மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்  இரண்டு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பாசார் கிராமத்தைச் சேர்ந்த திலீப் குமார் மகன் சதீஷ்குமார் வயது 20, அதே கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் பரணி வயது 20 மற்றும் நடராஜன் மகன் வெங்கடேசன் வயது 20 இவர்கள் 3 பேரும் நேற்று இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று பேரும் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்குத் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிச் சென்றனர்.

அப்பொழுது ஆவட்டி பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் சதீஷ்குமார், பரணி, இரண்டு பேரும் இறந்தனர். இதில் வெங்கடேசன் பலத்த காயம் ஏற்பட்டு அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் அங்குச் சிகிச்சை பலனின்றி வெங்கடேசனும் இறந்தார்.

இதனை அறிந்த ராமநத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேர் உடலையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் இந்த விபத்துகுறித்து ராமநத்தம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *