Bali: ஆன்மீக ஸ்தலங்கள்!

மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்கள் பல உண்டு. அவற்றில்   ஒன்று நாம் வெளியூர்களுக்கு  சுற்றுலா செல்வது. அவ்வாறு நாம் செல்லும்போது அங்கு என்னென்ன  பிரசித்தம்  என அறிந்து  அங்குச் செல்வது வழக்கம்.

அப்படியாக நாம் செல்லும் இடம் கோவில்கள் நிறைந்த இடமாக இருந்தால் இன்னும் சிறப்பு. உலக அளவில் புகழ் பெற்ற கோவில்களைப் பார்க்கலாம். இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலியில் பல கோவில்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் நம் மனதை மட்டுமல்லாது கண்களுக்கும் விருந்து கொடுப்பதாக இருக்கிறது.

முதலாவது உலுவந்து கோவில், குன்றின் மீது அமைந்திருக்கும் இக்கோவிலில் ஹியாங் விதி வாசா ஏனும் தெய்வத்தை வணங்குகிறார்கள். இந்த ஆலயத்தின்  அருகில் தினந்தோறும் கேகாக் ஏனும் நடன நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. தொல்லியல் எச்சங்கள். கடல், சூரியன்  இவற்றின் அழகைக் காணவே பக்தர்கள் மற்றும் சுற்றொலா பயணீகள் படையெடுக்கின்றனர்.

அடுத்ததாகக் குணங் காவி  எனும் கோவில் பாலியின் மிகப் பழமையான மற்றும் சிறந்த கோவிலாகும். கோவிலின் முகப்பை அடைய 370 படைகளைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். பெண் பக்தர்கள் தன்கள் காணிக்கைகளை தலையில் சுமந்து தான் செல்கிறார்கள்.

படிகள் ஏறிச் செல்லும்போது காணப்படும் இயற்கை காட்சிகள் மிகவும் அழகானவையாக இருக்கும். இக்கோவில் அனக் வுங்க  அரசர் மற்றும் அவரது ராணிகளுக்காகக் கட்டப்பட்டது.

பாலியில் நீருக்கடியில் இருக்கும் ஒரு கோவில் மிக அதிசயிக்கத்தக்கது. நீரில் பல அடி ஆழத்தில் இருக்கும்  சுவாமியை நீரின் மேற்பரப்பில்  இருந்தே பார்க்க முடியும். இக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள்  சிலர்   டைவிங் சாகசம் செய்தும் ஸ்னோர்கெல்லிங்  மூலம் தண்ணீருக்குள் இருக்கும் சுவாமியை  வணாங்குவார்கள்.

தமன் ஆயுன் கோவில், குளத்தில் தாமரை மலர்கள், மீன்கள் சூழ  பசுமையான  செடி கொடிகள் நிறைந்த, அற்புத கட்டிடக் கலையுடன், சிற்பங்களும்  இக்கோவிலை அழகு மிளிரக் காட்சி தரச் செய்கிறது. இங்குள்ள கோவில்கள் பல  கூரைகளால் வேயப்பட்டிருப்பது இதன் சிறப்பு.

கோவா லாவா கோவில், இக்கோவிலைத் தரிசித்தால் மட்டுமே, சுற்றுலா நிறைவு பெற்றதாகக் கூறப்படும் அளவு  சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. கடற்கரையில் அமைந்துள்ள இக்கோவிலைச்  சுற்றி குகைகள் மற்றும் நாகத்தின் உருவங்கள் அழகுக்கு அழகு சேர்ப்பவை.

பாலி சென்றால், இங்குச் செல்லாமல் இன்பம் காணாமல், காலி மனதோடு வராதீர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *