தான் பெற்ற பதக்கங்களைக் காண்பித்து வாழ்த்து பெற்ற தடகள வீரர்!

Advertisements

M K Stalin | Selva Prabhu Thirumaran

பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்றதையொட்டி தடகள விளையாட்டு வீரர் செல்வபிரபு முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தடகள விளையாட்டு வீரர் செல்வபிரபு, டிரிப்பிள் ஜம்ப் தடகள போட்டியில் 20-வது தேசிய ஜூனியர் ஃபெடரேஷன் கோப்பை 2022 போட்டியில் தங்கப் பதக்கம், 4-வது கேலோ இந்தியா இளைஞர் போட்டியில் தங்கப் பதக்கம், இருபது வயதிற்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் கலி கொலம்பியா-2022 போட்டியில் வெள்ளிப் பதக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்றதையொட்டி சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

M K Stalin | Selva Prabhu Thirumaran | Best Asian Under 20 | Indian triple-jumper 

உடன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு. ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., திரு. செல்வபிரபுவின் பெற்றோர் ஆகியோர் உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *