Assistant Professor Posts: 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்… தேர்வுத் தேதி அறிவிப்பு!

Advertisements

தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் 65 துறைகளில் காலியாக உள்ள 4000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 4,000 பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரம் பிறந்தும் அறிவிக்கை வெளியிடப்படவில்லை.

இதனால் உதவி பேராசிரியர் பணியிடங்களை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பிக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்வுகுறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 29-ம் தேதிவரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் எழுத்துத் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதன் மூலம் 569 தமிழ் உதவி பேராசிரியர்கள், 656 ஆங்கில உதவி பேராசிரியர்கள், 318 கணிதம் மற்றும் 296 வணிகவியல் உதவி பேராசிரியர்கள் உட்பட 4,000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *