ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியின் வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா இணை தங்கம் பதக்கம் வென்றுள்ளனர்.
ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியின் வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷீத்தல் தேவி மற்றும் தோமன் குமார் இணை தங்கப் பதக்கம் வென்றனர்.
இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி, இந்தோனேசியாவை 151-148 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தது. 2026 ஆம் ஆண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், வில்வித்தைப் போட்டியிலும் இந்தியா பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.



