குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..!

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புக் கருதிப் பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தென்மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பேரருவியில் அதிகமாகத் தண்ணீர் விழுவதால் பாதுகாப்புக் கருதிச் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்களின்றி அருவி வெறிச்சோடிக் காணப்பட்டது. வெள்ளி உருகிச் சாடுவதுபோல் அருவியில் தண்ணீர் பாய்ந்து சென்றது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *