kerala : ரயில் பாதையில் மண் சரிந்து நெல்லை எக்ஸ்பிரஸ் இன்ஜின் தடம் புரண்டது.!

கேரளத்தின் பாறைச்சாலை – நெய்யாற்றங்கரை இடையே ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் அந்தத் தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளத்தின் பாறைச்சாலை – நெய்யாற்றங்கரை நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது.

இதனால் இரவு இரண்டேகால் மணியளவில் பிலாஸ்பூர் – திருநெல்வேலி விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. எனினும் ரயிலின் இஞ்சின் தடம்புரண்டது. இதில் ரயிலில் இருந்த பயணிகளுக்கும் ரயில்வே ஊழியர்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்ததும் விபத்து நிவாரண ரயில்களில் வந்த பணியாளர்கள் ரயில் பாதையில் இருந்த மண்ணை அகற்றிச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த மண்சரிவு காரணமாக இந்தப் பாதை வழியாகச் செல்லும் பத்துக்கு மேற்பட்ட ரயில்கள் தாமதமாகச் சென்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *