ஏமனில் சவுதி வான்வழித் தாக்குதல் – 4 பேர் பலி!

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்கள் மீது  சவுதி அரேபியா நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

ஏமனில் அரசுப் படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன. அதில்,  இரு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தைஸ், சனா ஆகிய நகரங்கள் மீது சவுதி அரேபியா நேற்று இரவு வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர். அதேவேளையில், சவுதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் நேபாளத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இரு தரப்பினரின் தொடர் தாக்குதலால் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *