இரண்டு நாள் பயணமாக கேரளா வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று கேரளாவுக்கு வருகைத் தரவுள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று கேரளாவிற்குச் செல்கிறார். அவர் இன்று காலை கொச்சிக்குத் தனி விமானம் மூலம் வந்தடைந்து ஆதிசங்கராச்சாரி யார் ஜென்ம பூமி ஆலயத்திற்குச் சென்று தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மாலை 3 மணியளவில் குருவாயூர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதனால் 3.30 மணி முதல் 4 மணி வரை குருவாயூரில் பக்தர்களுக்கான தரிசனம் தெற்கு நடையில் நிறுத்தி வைக்கப்படும்.
இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை கண்ணூரில் உள்ள எழில் மலை கப்பல் படைத் தளத்தில் நடைபெறும் அதிகாரிகள் பாஸிங் அவுட் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதன்பின்னர் அவர் தில்லி திரும்புகிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி கேரளத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *