அரியலூர் அருகே பணம் எடுத்துக் கொடுப்பது போல் நடித்துப் பெரியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றிய கொடுத்து 63 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்த 11 வழக்கில் தொடர்புடையை பலே டிப் டாப் திருடனை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் முட்டுவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம், இவர் கடந்த ஜனவரி மாதம் ஜெயங்கொண்டத்தில் உள்ள kvb atmயில் பணம் எடுக்கச் சென்றபோது அங்கிருந்த டிப் டாப் ஆசாமி பெரியவருக்கு உதவி செய்வது போல் நடித்து அவருடைய ஏடிஎம் கார்டை திருடிச் சென்றுள்ளார்.
பின்னர் பெரம்பலூரில் உள்ள ஒரு நகை கடைக்குச் சென்று அங்கு 33 ஆயிரத்து நகைக்குப் பணம் கட்டியுள்ளான்.பின்னர் அதே பகுதியில் உள்ள ஒரு atm -யில் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளான்.
இதுகுறித்து குறுஞ் செய்தி வந்த நிலையில் பெரியவருக்குச் சந்தேகம் வரக் கடந்த வாரம் ஸ்ரீ புரந்தானில் உள்ள sbi வங்கியில் சென்று விசாரித்துள்ளார்.
அப்போது அவரது வங்கில் கணக்கில் இருந்த 63 ஆயிரம் எடுக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த பெரியவர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சுமார் 80 சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து தொடர்ந்து சென்றனர்.பின்னர் அதில் உள்ள நபர் திருவண்ணாமலை மாவட்ட சேர்ந்த தேனிமலையை சேர்ந்தவர் எனத் தெரிவந்தது.இந்த டிப் டாப் ஆசாமி பெயர் ராவணன் என்றும் தெரியவந்தது.
அவரைக் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த இரண்டு ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்து அவரிடமிருந்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.மேலும் இவர்மீது விருத்தாசலம், ஆண்டிமடம், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் இவர்மீது 11 வழக்கு நிலுவையில் உள்ளது எனப் போலீசார் தகவல் கூறினர்.

