ரஜினி படத்தின் கலெக்‌ஷனை ஆறே நாளில் அடிச்சு தூக்கிய அரண்மனை4.!

Advertisements

சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் அரண்மனை 4 திரைப்படம் ரஜினி படத்தின் லைப் டைம் வசூலை முந்தி இருக்கிறது.

அரண்மனை திரைப்படத்தின் நான்காம் பாகம் கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. சுந்தர் சி இயக்கிய இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, விடிவி கணேஷ், கோவை சரளா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார். இப்படத்தை அவ்னி மூவீஸ் நிறுவனம் சார்பில் சுந்தர் சி-யும், குஷ்புவும் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது.

விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்ற அரண்மனை 4 திரைப்படம் வசூலிலும் பட்டைய கிளப்பி வருகிறது. இந்தியாவில் மட்டும் ரூ. 40 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் உலகளவில் ரூ.50 கோடி என்கிற இமாலய வசூலை ஆறே நாட்களில் எட்டிப்பிடித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக ஒரு ஹிட் படம் கூடக் கொடுக்காமல் வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்கு அரண்மனை 4 படம் ஆறுதல் அளித்துள்ளது.

இந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த லால் சலாம் படம் கூட இந்த அளவுக்கு வசூலிக்கவில்லை. லால் சலாம் திரைப்படம் மொத்தமாகவே ரூ.30 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. இந்த நிலையில், அரண்மனை 4 திரைப்படம் லால் சலாம் படத்தின் லைப் டைம் வசூலை ஆறே நாட்களில் அடிச்சு தூக்கி பாக்ஸ் ஆபிஸில் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் அரண்மனை 4 திரைப்படம் ரூ.100 கோடி வசூலையும் அசால்டாக எட்டிப்பிடிக்க வாய்ப்புள்ளது.

அரண்மனை 4 படம் தான் இந்த ஆண்டு கோலிவுட்டின் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஸ்டார் படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வருகிற மே 10-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் இந்த இரண்டு படங்களுக்கும் இடையே பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படத்தை இளன் இயக்கி இருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *