
தீபாவளி பண்டிகையை ஒட்டி மெகா சேல் ஆஃபரை பிளிப்கார்ட் தொடங்க உள்ளதால் ஐபோன் மற்றும் விலை உயர்ந்த கேட்ஜெட்களை தள்ளுபடி விலைக்கு வாங்கலாம்…
ஆண்டுதோறும் தீபாவளி ஆஃபராகத் தள்ளுபடி விலைக்குக் கேட்ஜெட்கள், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்களை 80 சதவீத தள்ளுபடி விலைக்குப் பிளிப்கார்ட் விற்பனை செய்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிளிக்கார்டு மெகா சேல் ஆஃபர் சில நாட்களில் தொடங்கும் என்றும், இந்த ஆண்டு சாதாரண ஸ்மார்ட்போன் முதல் ஆப்பிள் ஐபோன் வரை ஆஃபர்களில் பெற்று கொள்ளலாமெனக் கூறப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் மெகா சேல் ஆஃபரில் வாங்கும் பொருட்களுக்கு அதிகபட்ச தள்ளுபடி, கேஷ் பேக், நோக்காஸ்ட் இ.எம்.ஐ., எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் வழங்கப்பட உள்ளன.
பிளிப்கார்டின் மெகா சேல் ஆஃபர் அக்டோபரில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆஃபரில் சாம்சங் கேலக்ஸி S21FE 5G ஸ்மார்ட்போன் மற்றும் ஐபோன்கள்கல் குறைந்த விலைக்கு விற்பனையாக உள்ளன.

ஐபோன் விற்பனை அக்டோபர் ஒன்றாம் தேதியும், சாம்சங், ரியல்மி மாடல் செல்போன்கள் அக்டோபர் 3 மற்றும் 6 ம் தேதிகளிலும், ரெட்மி போன்கள் அக்டோபர் 7ம் தேதியும், ஒப்போ மாடல் அக்டோபர் 8ம் தேதியும் தள்ளுபடி விலையில் விற்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதே போன்று போகோ(Poco) மாடல் போன்களையும் அக்டோபர் 8ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செல்போன்கள் மட்டுமில்லாமல் ஸ்மார்ட் வாட்ச்கள், லேப்டாப்கள் 50% முதல் 80% வரை தள்ளுபடி விலைக்கு விற்கப்பட உள்ளன. இயர்போன் ரூ.499 முதல் விற்பனைக்கு வர உள்ளது. வைட் ஸ்கிரீன் மாடல் மானிட்டர்கள் அதிகபட்சமாக 70 % தள்ளுபடியில் விற்கப்பட உள்ளன.
இது மட்டுமில்லாமல் இன்னும் இருக்கு என ஆஃபர்களை வாரி வழங்குகிறது ஃபிளிப்கார்ட். அதன்படி பிரிண்டர்ஸ் 60% தள்ளுபடியிலும், எல்.இ.டி, டிவிகள் குறைந்த விலைக்கு, ஸ்மார்ட் டிவிகள் 75 சதவீத விலைக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

மேலும் பழைய ஐபோன்களின் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ஐபோன் 13, ஐபோன் 14 மாடல்கள் குறைந்த விலைக்கு வழங்கப்பட உள்ளன. ஸ்மார்ட் போன்கள் மட்டுமில்லாமல் பேஷன் மற்றும் அழகு சாதன பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், பர்னிச்சர், ஆடைகள், அணிகலன்கள், என அனைத்தும் அதிரடி தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதில், விவோ, சாம்சங், மோட்டோரோலா நிறுவனங்களின் பொருட்கள் அதிக தள்ளுபடி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
இதற்கெல்லாம் மேலாக, ரஷ் ஹவர் டீல்ஸ், பம்பர் ஆஃபர், சூப்பர் காம்போ முறைகளிலும் பல பொருட்கள் ஆஃபரில் விற்பனைக்கு வர உள்ளன. புது செல்போன் வாங்க விரும்புவோர் அக்டோபர் பிளிப்கார்ட் ஆஃபரில் வாங்கலாம்.

