மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு மந்தமான நாளாக இருக்கிறது. பிராத்தனை செய்வதன் மூலம் நற்பலன்களை பெறலாம். பணியிடத்தில் மந்தமான சூழ்நிலை நிலவும். முறையாகத் திட்டமிட்டு பணியாற்றுவது அவசியம். துணையுடன் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். தேவையில்லாத செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் மூட்டு வலி அல்லது தோள்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மோசமான நாளாக இருக்கிறது. உங்களிடம் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்து இருக்கும். பணியிடத்தில் பணியில் மும்மரமாக இருப்பீர்கள். துணையுடன் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். நிதிநிலைமை ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருக்கும். பதட்டத்துடன் இருப்பீர்கள்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். பணியிடத்தில் உங்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். துணையுடன் உணர்ச்சிப்பூர்வமான போக்குகளைத் தவிர்ப்பது நல்லது. பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது.உங்கள் இலட்சியத்தில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தைப் பொறுத்தவரை பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. துணையுடன் இனிமையான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். போதிய அளவில் பணப்புழக்கம் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. தினசரி வேலைகளிலும் கவனம் தேவை. பணியிடத்தில் கடினமான சூழ்நிலை நிலவும். துணையுடன் வீண் விவாதங்கள் ஏற்படும். புரிந்துணர்வில் பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்திற்காகக் கூடுதல் செலவுகள் ஏற்படும். கால்களில் வலி ஏற்பட வாய்ப்புளள்து.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. நீங்கள் கவலையுடன் இருப்பீர்கள். பணியிடத்தில் பணிகளை மேற்கொள்ளும்போது தவறுகள் நேர வாய்ப்புள்ளது. துணையுடன் மனம் திறந்து பேசுங்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடன் வாங்க நேரிடும். ஆரோக்கியத்தில் சளி பிரச்சனை ஏற்படலாம்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். துணையுடன் அகந்தைபோக்கை வெளிப்படுத்துவீர்கள். தேவையில்லாத செலவினங்கள் ஏற்படும். ஆரோக்கியாயத்தில் தொடை மற்றும் கால்களில் வலி ஏற்படலாம்.
விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது.உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் திறமையாகப் பணியாற்றிப் பாராட்டு பெறுவீர்கள். துணையிடம் இனிமையான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள்.பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு உகந்த நாள். ஆன்மீக செயல்களில் ஈடுபடுவது நல்ல பலன்களை அளிக்கும். பணியிடத்தில் பணிவளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். துணையுடன் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். அதிக பணவரவு கிடைக்கும். பயனுள்ள விஷயங்களுக்குப் பணத்தை செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. வெற்றி பெறுவதற்கு கடினமான உழைப்பும் முயற்சியும் தேவை. பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரிகளின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெறுவீர்கள். துணையுடன் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். முதலீடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். நிதி சம்மந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் பல்வலி அல்லது செரிமானம் பிரச்சனை ஏற்படலாம்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். பணியிடத்தில் திறமையாகப் பணியாற்றி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் அமைதியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். நிதிநிலமை சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பு உயரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் கவனமாகப் பணியாற்ற வேண்டும். துணையின் விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்வீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.பணவரவு போதிய அளவில் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.



