Andhra Assembly Elections Results :தெலுங்கு தேசம்- பாஜக கூட்டணி முன்னிலை!

Advertisements

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. 175 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்க 88-இடங்களில் வெற்றி பெறுவது அவசியம்.

அமராவதி:நமது நாட்டில் 18-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதிவரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்குத் தொடர் ஓட்டம்போல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ந் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2-ந் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்ககள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்ப கட்ட நிலவரப்படி தெலுங்கு தேசம்- பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

ஆந்திராவில் உள்ள மொத்த சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். இந்தத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சி அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *