
காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் இல்லையேல் தருமபுரி மாவட்டத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக முதல்வருக்கு பாமாகா தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாமா கா தலைவர் டாக்டர் அன்புமனி ராமதாஸ் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பாமா காவினர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி பங்கேற்று கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ்
நிலத்தடி நீர்மட்டம் 1700 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது தண்ணீர் இல்லாததால் 4.50 லட்சம் தேரில் விவசாயம் அழியும் ஆபத்து உள்ளது தர்மபுரி மாவட்டம் வழியாக செல்லும் காவிரியில் ஆண்டுதோறும் சராசரியாக 50 முதல் 100 டிஎம்சி தண்ணீர் உபரிநீராக கடலில் கலக்கிறது. அதில் மூன்று டிஎம்சி நீரை பயன்படுத்தி தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் பாசன ஆதாரங்களை மேம்படுத்துவதே தருமபுரி காவிரி உபநீதி திட்டமாகும்.
இத்திட்டத்தினை நிறைவேற்றினால் தர்மபுரி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் கூடுதலாக பாசன வசதி பெரும். காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் இல்லையேல் தருமபுரி மாவட்டத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக முதல்வருக்கு பாமாகா தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்காவிரி உபரி நீர் திட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் உடனடியாக செயல்படுத்த கோரி தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆயிரக்கணக்கான பாமக தொண்டர்களும், பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கையினை அரசுக்கு வலியுறுத்தும் விதமாக கோஷங்களை எழுப்பினார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜிகே மணி எம்எல்ஏ தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி வெங்கடேஸ்வரன் எம் எல் ஏ, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாமக மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் ,விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும், திரளாக கலந்து கொண்டனர்.


